Breaking
Thu. Jul 10th, 2025

வரலாற்று நிகழ்வாக இசைஞானி இளையராஜா இசையில் ” திருக்குறள் ” திரைப்படம் ஜூன் 27 ஆம் தேதி வெளியாகிறது.

வரலாற்று நிகழ்வாக இசைஞானி இளையராஜா இசையில் ” திருக்குறள் ” திரைப்படம் ஜூன் 27 ஆம் தேதி வெளியாகிறது.
 
ஜூன் 27 ஆம் தேதி உலகமெங்கும் வெளியாகும்” திருக்குறள் ” திரைப்படம்.
 
பெருந்தலைவர் காமராஜர் வாழ்க்கை வரலாற்றை ‘காமராஜ்’ என்ற பெயரிலும், காந்தியின் வாழ்க்கை வரலாற்றை ” Welcome Back Gandhi ” என்ற பெயரிலும் திரைப்படமாகத் தயாரித்த ‘ரமணா கம்யூனிகேஷன்ஸ்’ நிறுவனம், தற்போது  திருக்குறளை மையமாக வைத்து மிகப் பிரம்மாண்டமாகத்  ‘திருக்குறள்’ என்ற திரைப்படத்தைத் தயாரித்துள்ளது.
 
இப்படத்தில் வள்ளுவராக கலைச்சோழன், வாசுகியாக தனலட்சுமி, பாண்டிய மன்னனாக ஓ.ஏ.கே.சுந்தர், நக்கீரராக இயக்குநர் சுப்ரமணிய சிவா, புலவர் பெருந்தலைச்சாத்தனாக கொட்டாச்சி ஆகியோரோடு, குணாபாபு, பாடினி குமார் மற்றும் பலர் நடித்துள்ளனர்.
 
இசைஞானி இளையராஜா பாடல்கள் எழுதி இசையமைத்துள்ளார்.
 
 A.M.எட்வின் சகாய் ஒளிப்பதிவு செய்துள்ளார்.
கலை இயக்குநராக சுரேஷ் கலேரியும், ஆடைவடிவமைப்பாளராக சுரேஷ் குமாரும் பணியாற்றியுள்ளனர். 
 
இத்திருப்பணியில் மதுரை டி.பி.ராஜேந்திரன் முதன்மைப் பங்களிப்புச் செய்துள்ளார். வி.ஐ.டி.வேந்தர் கோ.விஸ்வநாதன் தலைமையிலான  தமிழியக்கமும் இப்பணியில் இணைந்துள்ளது.  ரமணா கம்யூனிகேஷன்ஸ் இத்திரைப்படத்தைத் தயாரித்துள்ளது.
 
தயாரிப்பு நிர்வாகம் – S. ஜெய்சங்கர்
 
மக்கள் தொடர்பு – புவன் செல்வராஜ் 
 
கதை, திரைக்கதை, வசனம் – செம்பூர்.கே.ஜெயராஜ்
 
காமராஜ், Welcome Back Gandhi,  படத்தை இயக்கிய A.J.பாலகிருஷ்ணன் இத்திரைப்படத்தை இயக்கியுள்ளார்.
 
படம் பற்றி அவர் நம்மிடயே பகிர்ந்தவை…
 
அறம் சார் வாழ்வியலை மானுடர்க்கு போதிப்பதில் உலகில் முன்னிலை வகிக்கும் நூல் திருக்குறள். திருக்குறளின் முப்பாலை மையக் கருவாகக் கொண்டு, இப்படத்திற்கான திரைக்கதை எழுதப்பட்டுள்ளது.
படைப்பினூடாக படைப்பாளியைக் கண்டடையும் முயற்சியில் திருவள்ளுவரும் இப்படத்தில் ஒரு பாத்திரமாக வருகிறார். கூடவே வாசுகியும், அதோடு இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய தமிழரின் வாழ்வியலும் இத்திரைப்படத்தில் முக்கிய அங்கம் வகிக்கிறது.
 
காதலோடு, வீரமும் தமிழர் வாழ்வில் பிரிக்க முடியாத ஒன்றாகும். அன்றைய தமிழரின் வீரத்தைப் பறைசாற்றும் போர்க்களக் காட்சிகளும் மிகுந்த பொருட்செலவில் படமாக்கப்பட்டுள்ளன. 
 
இத்திரைப்படத்தைப் பார்த்த இசைஞானி இளையராஜா, உடனடியாக இசையமைக்க இசைவு தெரிவித்தார். அத்துடன் இப்படத்திற்காக, சங்க இலக்கியச் சொற்களோடு, கவித்துவமும், பொருட்செறிவும் மிக்க இரு பாடல்களையும் எழுதியுள்ளார்.
முத்தமிழில், முதல் தமிழுக்கான உயரிய படைப்பிற்கு, இரண்டாம் தமிழின் அரியணையில் வீற்றிருக்கும் இசைஞானி இசையமைப்பது, இத்தனை ஆண்டுகால தமிழுக்கான வரலாற்றில் ஒரு அற்புத நிகழ்வாகும்.
 
ஜி.யூ.போப் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த பின்பு தான், திருக்குறள் உலக அளவில் அறிஞர்களின் கவனத்தை ஈர்த்தது. அதுபோல் இந்நிகழ்விற்குப் பின் சர்வதேச அளவில் உலக மக்களின் கவனத்தையும் நிச்சயம் இந்த திருக்குறள் படம் ஈர்க்கும் என்கிறார் இயக்குனர் A.J. பாலகிருஷ்ணன்.
 
திருக்குறள் படம் ஜூன் 27 ஆம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகிறது.

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *