Breaking
Thu. Jul 10th, 2025

யஷ் ராஜ் பிலிம்ஸின் வார் 2 ஆகஸ்ட் 14ம் தேதியன்று உலகளவில் உள்ள ஐமேக்ஸ் திரைகளில் வெளியாகிறது

யஷ் ராஜ் பிலிம்ஸின் வார் 2 ஆகஸ்ட் 14ம் தேதியன்று உலகளவில் உள்ள ஐமேக்ஸ் திரைகளில் வெளியாகிறது . 50 நாட்களில் வெளியாகவுள்ள வார் 2 படத்திற்காக புதிய போஸ்டரை வெளியிட்டுள்ளனர்!

யஷ் ராஜ் நிறுவனத்தின் ஸ்பை யுனிவர்சில் உருவாகியுள்ள இந்த ஆண்டின் மிகவும்  எதிர்பார்க்கப்படும் அதிரடி ஆக்சன் படம்  வார் 2 திரைப்படம் வட அமெரிக்கா, மத்திய கிழக்கு, இங்கிலாந்து மற்றும் ஐரோப்பா, ஆஸ்திரேலியா, ஆப்பிரிக்கா மற்றும் தென்கிழக்கு ஆசியாவின் போன்ற  முக்கிய சர்வதேச மார்கெட்டைல் உள்ள ஐமேக்ஸ் திரைகளில்  பிரத்தியேகமாக திரையிடப்படுகிறது .மேலும்  இந்தியாவில் உள்ள ஐமேக்ஸ் துறைகளிலும் இப்படம் வெளியாகவுள்ளது .

மும்பை, இந்தியா: இந்தியாவின் முதன்மையான திரைப்பட ஸ்டுடியோ மற்றும் நாட்டின் மிகப்பெரிய சினிமா உரிமையாளர்களின் தாயகமான யஷ் ராஜ் பிலிம்ஸ், வார் 2 படத்தை  பிரத்யேகமாக உலகளவில் ஐமேக்ஸ் திரைகளில் வெளியிடுவதை  பெருமையுடன் அறிவித்துள்ளனர் . பிரமாண்டமான ஆக்சன் காட்சிகளுடன் ஸ்பை த்ரில்லர் கதை களத்தில் உருவாகியுள்ள இப்படம் வட அமெரிக்கா, மத்திய கிழக்கு, இங்கிலாந்து மற்றும் ஐரோப்பா, ஆஸ்திரேலியா, ஆப்பிரிக்கா மற்றும் தென்கிழக்கு ஆசியாவின் முக்கிய சர்வதேச மார்க்கெட்டுகளில் உள்ள ஐமேக்ஸ் திரையரங்குகளிலும், ஆகஸ்ட் 14 அன்று இந்தியாவில் அதன் உள்நாட்டு வெளியீட்டுடன், உலகமெங்கும் உள்ள ரசிகர்களுக்கு அடுத்தகட்ட அனுபவத்தை வழங்கவுள்ளது .

பதான், டைகர் 3 மற்றும் வார் 1 போன்ற படங்களுக்கு உலகளவில் கிடைத்த வெற்றிகளைத் தொடர்ந்து, இந்தியாவின் மிகப்பெரிய மற்றும் மிகவும் வெற்றிகரமான திரைப்பட தயாரிப்பு நிறுவனமான யஷ் ராஜ் ஸ்பை யுனிவர்ஸின் வார் 2 பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. 2023ம் ஆண்டில் வெளியான பதான் ஏற்கனவே இந்திய சினிமா வரலாற்றில் ஐமேக்ஸ் திரைகளில் வெளியாகி அதிக வசூலித்த படங்களில் ஒன்றாக மாறியது என்பது குறிப்பிடத்தக்கது.

வார் 2 படம் வெளியாகுவதற்கு இன்னும் 50 நாட்கள் உள்ள நிலையில இதற்காக  யஷ் ராஜ் நிறுவனம்  இன்று ஐமேக்ஸ் அறிவிப்புடன் ரித்திக் ரோஷன், ஜூனியர் என்டிஆர் மற்றும் கியாரா அத்வானி ஆகியோரின் புதிய போஸ்டர்களைக் வெளியிட்டுள்ளனர் .

யஷ் ராஜ் பிலிம்ஸின் சர்வதேச விநியோக துணைத் தலைவர் நெல்சன் டி’சோசா கூறியவை “யஷ் ராஜ் பிலிம்ஸ் உலகளவில் இந்திய சினிமாவின் எல்லையை கடந்து அடுத்த கட்டத்திற்கு நாங்கள் அழைத்து செல்கிறோம் .  “YRF ஸ்பை யுனிவர்ஸில் வார் 2 படம் ஒரு மைல்கல்.மேலும் பார்வையாளர்களுக்கு மிகவும் ஆழமான அனுபவத்தை வழங்க ஐமேக்ஸ் திரைகளுடன் இணைவதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். வார் 2 இந்திய சினிமா வரலாற்றில் இரண்டு பெரிய சூப்பர் ஸ்டார்களான ஹிருத்திக் ரோஷன் மற்றும் ஜூனியர் என்டிஆர் இருவரின் மோதலை மிகவும் பிரம்மாண்டமான அனுபவமாக காட்சி படுத்தியுள்ளோம்”,

lum ஐமேக்ஸ் நிறுவனத்தின் சர்வதேச மேம்பாடு மற்றும் விநியோகத்தின் துணைத் தலைவர் கிறிஸ்டோபர் டில்மேன் கூறுகையில் , “ஆதித்யா சோப்ரா மற்றும் யஷ் ராஜ் பிலிம்ஸ் உடன் இணைந்து இந்த ஆண்டின் மிகப்பெரிய இந்திய படமான ‘வார் 2’ படத்தை உலகெங்கும் உள்ள ஐமேக்ஸ் திரைகளுக்கு  கொண்டு வருவதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம், ”

அயன் முகர்ஜி இயக்கியுள்ள வார் 2 திரைப்படம் பிரமிக்க வைக்கும் அதிரடி காட்சிகளைக் கொண்டுள்ளது. வார் 2 திரைப்படம் ஐமேக்ஸ் திரைகளைக் மனதில் கொண்டு படமாக்கப்பட்டுள்ளது , ஐமேக்ஸின் மிகப்பெரிய திரை மற்றம் ஐமேக்ஸ் திரைகளுக்கு உள்ள சிறப்பான  ஒலி ரசிகர்களுக்கு அதிகபட்ச தாக்கத்தை ஏற்படுத்தும்.

வார் 2 படத்தின் ஐமேக்ஸ் வெளியீட்டிற்கான சிறப்பு டீசர் ஏற்கனவே உலகளவில் உள்ள ஐமேக்ஸ் திரையரங்குகளில் ஒளிபரப்பத் தொடங்கியுள்ளது.வார் 2 படத்தின் முழு அனுபவத்தை இந்தாண்டு ஆகஸ்ட் 14ந் தேதியன்று ஐமேக்ஸ் திரைகளில் பிரத்தியேகமாக காணலாம் .

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *