Thank You Note from the Desk of DOP #Ravivarman ASC ISC!
அமெரிக்கன் சொசைட்டி ஆப் சினிமாட்டோகிராபர்ஸ் ASC இல் நான் ஏற்கப்பட்டதற்கு எனது இதயபூர்வ நன்றியைத் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்.
இது என் தனிப்பட்ட சாதனை அன்று:
பல தரப்பட்ட மனிதர்களின் ஆதரவின்றி சாத்தியமே இல்லாத ஒரு மைல்கல் ஆகும்.
என்னை ஊக்கப் படுத்திய
பத்திரிக்கை மற்றும் ஊடகங்களுக்கு, பெரும் நன்றி: என் தொடர்பான செய்திகளை மக்களிடம் கொண்டு சென்றதற்கு.
நான் பணி புரிந்த படங்களை இயக்கிய ஒவ்வொரு இயக்குனர், தயாரிப்பாளர் மற்றும் , சக தொழில் நுட்பக் கலைஞர்களுக்கு, எனது பயணத்தின் ஒரு பகுதியாக இருந்ததற்கும், ஒவ்வொரு கட்டத்திலும் என்னைச் சிறப்பாகச் செயல் படத் தூண்டியதற்கும் நன்றி.
ASC இல் உள்ள நண்பர்கள் மற்றும் மரியாதைக்குரிய ஒளிப்பதிவாளர்களுக்கு, மிக்க நன்றி, நீங்கள் என்னில் ஏதோ ஒன்றைக் கண்டு, இந்த அசாதாரண வாய்ப்பை எனக்குக் கொடுத்தீர்கள். உங்கள் ஆதரவு விலைமதிப்பற்றது.
என்னிடம் உள்ள அனைத்து திறமைகளையும் ASC சமூகத்திற்கு பங்களிக்க நான் விழைகிறேன்.
இது என் வாழ்வில் மிகுந்த தன்னடக்கத்தை போதிக்கிற தருணம், இதை நான் நெஞ்சார்ந்த நன்றியுடனும், பெரும் பொறுப்புடனும் ஏற்றுக்கொள்கிறேன்.
***