Breaking
Sun. Mar 23rd, 2025

ஃபேண்டஸி ஹாரர் காமெடி திரைப்படம் “ஹவுஸ் மேட்ஸ்” ஃபர்ஸ்ட் லுக் வெளியானது !!

ஃபேண்டஸி ஹாரர் காமெடி திரைப்படம் “ஹவுஸ் மேட்ஸ்” ஃபர்ஸ்ட் லுக் வெளியானது !!

அனைத்து தரப்பும் ரசிக்கும் படியான
புதிய ஃபேண்டஸி ஹாரர் காமெடி திரைப்படம் “ஹவுஸ் மேட்ஸ் “

உலகம் முழுவதும் ஃபேண்டஸி ஹாரர் காமெடி திரைப்படங்களுக்கு அனைத்து தரப்பு ரசிகர்களும் விரும்பி திரையரங்குகளுக்கு குடும்பத்துடன் விசிட் அடிப்பது வழக்கம். அதற்கு கடந்த சில வருடங்களில் வந்து வெற்றி பெற்ற படங்களை நாம் வரிசையாக கூறலாம் , அவ்வரிசையில் இப்போது முற்றிலும் புதிய களத்துடன் திரைக்கு வர இருக்கும் திரைப்படம் “ஹவுஸ் மேட்ஸ்” (HOUSE MATES).

இத்திரைப்படத்தில் கதையின் நாயகனாக தர்ஷன் நடிக்கிறார் , இவர் ஏற்கனவே கனா , தும்பா போன்ற படங்களில் முதன்மை கதாப்பாத்திரங்களில் நடித்தவர் . விஜய் டிவியின் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் மூலம் பெரும்பான்மையாக அறியப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது . இவருடன் மிக முக்கியமான கதாப்பாத்திரத்தில் காளி வெங்கட் அவர்களும் நடித்திருக்கிறார். இவர்களுடன் இணைந்து அர்ஷா சாந்தினி பைஜூ , வினோதினி , தீனா , அப்துல் லீ , மாஸ்டர் ஹென்ரிக் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்திருக்கின்றனர்.

இத்திரைப்படத்தை T. ராஜவேல் எழுதி , இயக்கி இருக்கிறார். இவர் இயக்குனர் அஜய் ஞானமுத்து அவர்களிடம் இணை இயக்குனர் ஆகவும் , சமீபத்தில் வந்து பெரும் வெற்றி பெற்ற “DEMONTE COLONY 2 “ படத்தின் எழுத்தாளர் குழுவில் பணியாற்றி இருந்தார் என்பதும் குறிப்படத்தக்கது . இத்திரைப்படத்தை PLAYSMITH STUDIOS நிறுவனம் சார்பில் S.விஜய பிரகாஷ் அவர்கள் தயாரித்து உள்ளார் .இவருடன் இணைந்து இயக்குனர் S.P.சக்திவேல் (SOUTH STUDIOS ) அவர்கள் படைப்பு தயாரிப்பாளராக களம் கண்டுள்ளார். M.S.சதீஷ் அவர்கள் ஒளிப்பதிவு இயக்குனராக பணியாற்றிஉள்ளார் . நேரம் , பிரேமம் படங்களுக்கு இசையமைத்த ராஜேஷ் முருகேசன் இத்திரைப்படத்துக்கு இசையமைத்துள்ளார் .

படத்தின் மையக்கரு ஒரு அபார்ட்மெண்டை சுற்றிலும் நடக்கும் சம்பவங்களின் தொகுப்பாகவும் , மிடில் கிளாஸ் குடும்பங்களின் அன்றாட உணர்வுகளை பிரதி பலிக்கும் வகையிலும் , *படம் முழுக்க முழுக்க ஃபேண்டஸி, ஹாரர் என அனைவரும் விரும்பி பார்க்கும் வகையிலும் , குடும்பமாக சென்று ரசிக்கும் வகையிலும் *படமாக்கப்பட்டுள்ளது என படக்குழு தெரிவித்துள்ளது.

தற்போது படத்தின் இறுதி கட்ட பணிகள் நடைபெற்றுவருகின்றன .கோடை விடுமுறையில் படம் திரைக்கு வரும் என படக்குழு தெரிவித்துள்ளது .

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *