Breaking
Tue. Aug 18th, 2026

இயக்குநர் விஜய்ஶ்ரீ ஜி இயக்கும் புதிய படத்தில் ‘பன்னீர் புஷ்பங்கள்’ புகழ் சுரேஷ் மறு அறிமுகம்!

வித்தியாசமான கதைக்களங்களையும், சவாலான பாத்திரங்களையும் படைத்து எதிர்பாராத நடிகர்களை நடிக்க வைப்பதில் தனிக்குறிப்பாக பேசப்படும் இயக்குநர் விஜய்ஶ்ரீ ஜி, தனது புதிய முயற்சியாக ‘பன்னீர் புஷ்பங்கள்’ புகழ் சுரேஷை மறு அறிமுகம் செய்ய உள்ளார்.

மலேசியாவை சேர்ந்த ஜி வி இன்டர்நேஷனல் தயாரிக்கும் இந்த பிரம்மாண்ட படத்தில் மலேசிய ரஜினிகாந்த் என்று அழைக்கப்படும் டத்தோ கணேஷ், அனித்ரா நாயர், தீபா, மொட்டை ராஜேந்திரன், சிங்கம் புலி உள்ளிட்டோர் நடிக்கின்றனர். இசை ‘ஹரா’ புகழ் ரஷாந்த் ஆர்வின்.

விஜய்ஶ்ரீ ஜி இதற்கு முன் ‘தாதா 87’ திரைப்படத்தில் சாருஹாசனை, ‘பவுடர்’ படத்தில் நிகில் முருகனை, ‘ஹரா’ படத்தில் நீண்ட இடைவெளிக்கு பின் மோகனை திரையுலகிற்கு கொண்டு வந்தார். தற்போது 80களில் ரசிகர்களின் இதயங்களை கைப்பற்றிய சுரேஷை திரையில் மீண்டும் பார்க்க ரசிகர்கள் ஆவலுடன் இருக்கின்றனர்.

இந்த பரபரப்பான கதையை கொண்ட படத்தின் படப்பிடிப்பு விரைவில் இந்தியா மற்றும் மலேசியாவில் தொடங்கவுள்ளது. மேலும், இப்படத்தின் டைட்டில் டீஸர் ஏப்ரல் 19 அன்று மலேசியாவில் வெளியிடப்பட உள்ளது. இது ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கும் என படக்குழுவினர் நம்பிக்கையுடன் தெரிவிக்கின்றனர்.

Related Posts