Breaking
Sun. Oct 12th, 2025

“பக்தி சூப்பர் சிங்கர்” – ஃபைனலுக்கு முன்னரே கிடைத்த திரைப்பட வாய்ப்புகள் !!

 

 

“பக்தி சூப்பர் சிங்கர்” அபிராமிக்கு, இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் தந்த திரைப்பட வாய்ப்பு !!

பவித்ரா மற்றும் அலெய்னாவுக்கு இசைக்கலைஞர் T.L. மகாராஜன் தந்த இசை வாய்ப்பு !!

தமிழகத்தின் முன்னணி தொலைக்காட்சியான விஜய் டிவி தொலைக்காட்சியின் மிகப் பிரபலமான பக்தி இசை ரியாலிட்டி ஷோவான “பக்தி சூப்பர் சிங்கர்” நிகழ்ச்சி பரபரப்பான இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. ஆனால் ஃபைனலுக்கு முன்னரே பல இளம் திறமையாளர்களுக்கு, திரைப்பட வாய்ப்புகள் கிடைத்து ஆச்சரியப்படுத்தியுள்ளது.

பவித்ரா மற்றும் கார்த்திக் ஆகியோர், இறுதிப் போட்டிக்கு நேரடியாகத் தேர்வாகியுள்ள நிலையில், அடுத்தகட்ட பாடகர்கள் வரும் வாரத்தில் தேர்ந்தெடுக்கப்படவுள்ளனர்.

முன்னெப்போதையும் விட இந்த முறை நடந்த பக்தி சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி, பாடகர்களுக்கான முன்கூட்டிய திரைப்பட வாய்ப்புகள், சர்ப்ரைஸ் தருணங்கள், பிரபலங்களின் வருகை, நெகிழ்வான சம்பவங்கள் எனக் களை கட்டியது. பல அற்புத தருணங்கள் நிறைந்த இந்த சீசன் மக்களிடம் மிகப்பெரும் வரவேற்பைப்பெற்றுள்ளது.

இந்த சூப்பர் சிங்கர் போட்டியில், பல பின்னணியிலிருந்து வரும் அற்புதமான பல பாடகர்கள், மக்களின் மனங்களைக் கவர்ந்ததோடு, திரைக்கலைஞர்களையும் கவர்ந்துள்ளனர்.

இந்த பக்தி சூப்பர் சிங்கரிலிருந்து உதித்த ஒரு நட்சத்திரமாக இளம் திறமையாளரான அபிராமி ஜொலித்து வருகிறார். தேவகோட்டை அபிராமி – காரைக்குடிக்கு அருகிலுள்ள சிற்றூரைச் சேர்ந்த ஒரு நாட்டுப்புறப் பாடகி. எந்த இசை பயிற்சியும் இல்லாதவர். கிராமத் திருவிழாக்களில் மட்டுமே பாடிய அனுபவமுள்ள இவர், பக்தி சூப்பர் சிங்கரில் கலந்துகொண்டதிலிருந்து ரசிகர்களின் பேரன்பையும், பாராட்டையும் பெற்றுவருகிறார்.

அபிராமியின் தனித்த குரலும், உணர்வுமிக்க பாணியும் இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்த் அவர்களைக் கவர்ந்திழுக்க, அவர் தனது அடுத்த படங்களில் அபிராமிக்குப் பாட வாய்ப்பு வழங்கியுள்ளார். இது அபிராமிக்குக் கிடைத்துள்ள ஒரு பெரிய வாய்ப்பாகும் – பக்தி சூப்பர் சிங்கர் இவரது வாழ்க்கையை திரைப்பாடகியாக மாற்றியமைத்துள்ளது.

இசைப் பட்டம் பெற்ற T.L. மகாராஜன், போட்டியாளர்களான பவித்ரா மற்றும் அலெய்னா ஆகிய இருவரையும் தனது வரவிருக்கும் பக்தி ஆல்பத்தில் பாட அழைத்துள்ளார். “தெய்வீகமான பாடலை தேடி…” எனும் பக்தி சூப்பர் சிங்கரின் டேக் லைன் உண்மையிலேயே பல இளம் திறமைகளை வெளிச்சத்திற்குக் கொண்டுவந்துள்ளது.

சூப்பர் சிங்கர், ஒரு போட்டி நிழச்சியாக மட்டுமல்லாமல், திறமையால் ஒளிரும் பலருக்கு, வாழ்வின் திருப்புமுனையாக பெரும் மாற்றம் தந்து வருகிறது. பக்தி சூப்பர் சிங்கர் பலருக்கும் சினிமா இசைத்துறைக்குள் நுழையும் வாயிலைத் திறந்து வைத்துள்ளது.

பல திறமையாளர்களுக்கான அடையாளமாக மாறி, பல அற்புத தருணங்களுடன் பரபரப்பாக நடந்து வருகிறது “பக்தி சூப்பர் சிங்கர்”.

 

 

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *