Breaking
Thu. Jul 10th, 2025

‘மக்கள் செல்வன் ‘விஜய் சேதுபதி- பூரி ஜெகன்நாத் -சார்மி கார் -பூரி கனெக்ட்ஸ் -கூட்டணியில் இணைந்த நடிகை சம்யுக்தா

‘மக்கள் செல்வன் ‘விஜய் சேதுபதி- பூரி ஜெகன்நாத் -சார்மி கார் -பூரி கனெக்ட்ஸ் -கூட்டணியில் இணைந்த நடிகை சம்யுக்தா

‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதி – இயக்குநர் பூரி ஜெகன்நாத்- சார்மி கவுர் – பூரி கனெக்ட்ஸ் கூட்டணியில் தயாராகும் பான் இந்திய திரைப்படத்தில் நடிகை சம்யுக்தா இணைந்திருக்கிறார்.

அற்புதமான இயக்குநர் பூரி ஜெகன்நாத், பல் துறை திறமை கொண்ட ‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதியை முன்னணி வேடத்தில் நடிக்க வைத்து, தன்னுடைய இலட்சிய பான் இந்திய படத்தின் படப்பிடிப்பை தொடங்க உள்ளார். தனது அதி நவீன பாணியிலான கதை சொல்லலுக்கு பெயர் பெற்ற பூரி ஜெகன்நாத் – தனது தனித்துவமான வெகுஜன மற்றும் வணிகத்தனம் மிக்க பாணியை, ‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதியின் காந்தம் போன்ற திரை தோற்றத்துடன் இணைந்து தனித்துவமான சினிமா அனுபவத்தை வழங்க உறுதியளிக்கிறார். இந்த திரைப்படத்தை பூரி ஜெகன்நாத் மற்றும் சார்மி கவுர் ஆகியோர் பூரி கனெக்ட்ஸ் நிறுவனத்தின் கீழ் தயாரிக்கின்றனர். மேலும் இது தொடர்பான அனைத்து முன் தயாரிப்பு பணிகளும் நிறைவடைந்துள்ளன.

இப்படத்தில் நடிக்கும் முக்கிய நடிகர்களின் பட்டியலை தயாரிப்பாளர்கள் அண்மையில் ஒன்றன்பின் ஒன்றாக அறிவித்தனர். தபு, துனியா விஜய் குமார் ஆகியோர் படத்தில் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். இந்த பட்டியலில் தற்போது ‘தென்னிந்திய சினிமாவின் வசீகரம் ‘என போற்றப்படும் திறமையான நடிகை சம்யுக்தா முக்கிய வேடத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

இது வழக்கமான கதாநாயகி வேடம் அல்ல. சம்யுக்தாவின் கதாபாத்திரம் கதையின் ஒருங்கிணைந்த பகுதியாகும். நடிப்பிற்கும், உணர்ச்சிபூர்வமான ஆழத்திற்கும் ஏராளமான வாய்ப்புகள் உள்ளன. நடிகை சம்யுக்தா – இந்த படத்தின் கதை மற்றும் அவரது கதாபாத்திரத்தில் நடிப்பதற்கு ஆர்வமாக இருப்பதாகவும், படப்பிடிப்பில் கலந்து கொள்ளும் நாளை ஆர்வத்துடன் எதிர்நோக்கி இருப்பதாகவும் தெரிவித்திருக்கிறார்.

சென்னை மற்றும் ஹைதராபாத்தில் இப்படத்திற்கான முதற்கட்ட படப்பிடிப்பை நடத்துவதற்கான இடங்களை படக்குழுவினர் தேர்வு செய்துள்ளனர். இதன் வழக்கமான படப்பிடிப்பு ஜூன் மாத இறுதியில் தொடங்குகிறது.

பான் இந்திய அளவிலான இந்தத் திரைப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி ஆகிய இந்திய மொழிகளில் வெளியிடப்படும். மேலும் நாடு முழுவதும் உள்ள பார்வையாளர்களை கவரும் நோக்கில் இந்த படம் இருக்கும்.

நடிகர்கள் :
‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதி, சம்யுக்தா, தபு, துனியா விஜய் குமார்.

தொழில்நுட்பக் குழு :

எழுத்து & இயக்கம் : பூரி ஜெகன்நாத்
தயாரிப்பாளர்கள் : பூரி ஜெகன்னாத் – சார்மி கவுர்
தயாரிப்பு நிறுவனம் : பூரி கனெக்ட்ஸ்
தலைமை நிர்வாக அதிகாரி : விஷூ ரெட்டி
மக்கள் தொடர்பு : யுவராஜ்
மார்க்கெட்டிங் : ஹாஷ்டாக் மீடியா

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *